Print
7views
மன்னார் மாவட்டச் செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராகத் தரம் ஒன்றில் பணியாற்றி வந்த திருமதி பியூலா நோபட் யோகராஜா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விசேட தரப் பரீட்சையில் சித்தியடைந்து, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் விசேட தரத்திற்கு உயர்வுபெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மன்னார் மாவட்டச் செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கான நியமனக் கடிதம் இன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலகத்தின் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 
Ao Appoinment Miss Bijula 20261 Ao Appoinment Miss Bijula 20262 Ao Appoinment Miss Bijula 20263
Ao Appoinment Miss Bijula 20264
FaLang translation system by Faboba