கூட்டறிக்கை – 28.03.2019
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல்.
உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின் HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்திற்கு அமைவாக,
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற மீளாய்வு செய்தல் தொடர்பான கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரையின் கீழ்,
மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களின் தலைமையில் 28.03.2019 அன்று மு.ப 09.30 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக தாமரை தடாகம் (ICT UNIT) மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மேலதிக அரசாங்க அதிபர் தமது உரையில் உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் சுற்றறிக்கைக்கு இணங்க இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்படுள்ளது என்றும் இங்கு சமூகம் அளித்து இருக்கும் அனைவரும் அமைச்சின் நோக்கம் நிறைவேறவும் மன்னார் மாவட்டம் இணைத்தள வடிவமைப்பு மற்றும் இற்றைப்படுத்தலை முன்னேடுத்து செல்ல பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இக் கூட்டத்தில் மாவட்ட செயலக ICT துறைக்கு பொறுப்பான அலுவலர்களும் 5 பிரதேச செயலகங்களில் தலா 02 அலுவலர்கள் வீதம் 10 அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
ICT பிரிவில் கடமை புரியும் திரு.க .பரத் என்பவரால் Internet, Intranet, Extranet சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு Joomla மென்பொருளின் தன்மை, அது இயங்கும் விதம், அதன் உட்கட்டமைப்பு, Software, Freeware, Shareware போன்றவைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் தேடல் பொறிகளும்,அரச இணையத்தளங்களும் அதில் பிரசுரிக்கப்படும் ஆக்கங்களும் தேடல் பொறியின் இயல்பான கட்டமைப்பு தொடர்பான விடயங்களும், இணையத்தளங்களே எதிர்கால பிரதான தகவல் ஊடகம் என்பது பற்றியும் அவற்றைப் பாதுகாப்பானதாகவும்,வினைத்திறன் மிக்க வகையிலும் அரச சார்பான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் விதம் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் (05) இணைய தளங்கள் பார்வையிடப்பட்டு ,அவற்றுடன் பிற மாவட்ட இணையத்தளங்களும் ஒப்பு நோக்கி அவற்றில் இருக்கும் நல்ல விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டது.
உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின் HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்தின் இணைப்பான மாவட்ட மட்ட பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற படிவத்துக்கு அமைவாக எமது மாவட்டத்திற்குரிய 06 இணைய தளங்களும் தனித்தனியே ஆய்வு செய்யப்பட்டன.

11.00 am – 11.30 am - சிற்றுண்டி இடைவேளை (Tea brake)
மேற்படி படிவத்திற்கு அமைய அவ் ஆய்வில் இனங்காணப்பட்ட இற்றைப்படுத்தப்படாத(Update) தரவுகள் /தகவல்கள் இனங்காணப்பட்டு அந்ததந்த பிரதேச அலுவலர்களினால் தரவுகள் இற்றைப்படுத்தப்பட்டது. மேற்படி இற்றைப்படுத்தலின் போது இணையதளத்தின் இயக்க வேகமானது வெகுவாக குறைத்து இருந்ததால் இற்றைப்படுத்தலின் வேகத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் மேற்படி விடயத்திற்கு பொறுப்பதிகாரியான இலங்கையின் ICTA வில் கடமைப்புரியும் கருத்திட்ட முகாமையாளர் பாக்யா குமாரசிங்க அவர்களுக்கு மின்னஞ்சல் ,தொலைபேசி ஊடாக முறைப்பாடும் அளிக்கப்பட்டது .
தொடர்ச்சியாக அலுவலர்கள் தரவு இற்றை படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்ந்து இணையத்தளங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான விடயங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த படியினால்,அவற்றிற்கு என தனியான கோப்பு (File) முகாமைத்துவம் செய்வதுடன் உரிய அலுவலர்களின் அனுமதிப்பெற்று அவர்களின் மேற்பார்வையில் செய்திகளை இற்றைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
1.30 pm -2.30 pm – lunch time
மேலும் மேலதிக செயலாளரினால் இணைக்கப்பட்ட மேற்படி கடிதத்தின் படிவத்திற்கு அமைவாக 31.03.2019 திகதிக்கு முன்னராக இற்றைப்படுத்தும் பணிகளை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக இவ் இற்றைப்படுத்தல் பணியில் பிரதேச செயலக பிரிவில் கடமை புரியும் அலுவலர்கள் எதிர் நோக்கும் கீழ்வரும் பிரச்சனைகள் இனங்காணப்பட்டது.
- மேற்படி இற்றைப்படுத்தல் பணிக்கான கடமை அறிவுறுத்தல் கடிதமானது குறிப்பிட்ட அலுவலர்களுக்கு இதுவரையில் கையளிக்கப்படாமை.
- கணினி மற்றும் இணைய வசதி குறைவாக உள்ளமையும் பிரதானமாக பிரச்சினையாக இனங்காணப்பட்டது.
3.15 pm -3.30 pm – Tea time
அலுவலர்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் சேகரிக்கப்பட்டு தொடர்பாடல்களை மேலும் இலகுபடுத்தல் தொடர்பான “ICT MANNAR” எனும் பெயரில் Viber மூலம் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
தொடர்ச்சியாக இப் பயற்சி தொடர்பான நிறை, குறைகள் பயிற்சியில் பங்குபற்றியவர்களிடம் வினவப்பட்டதுடன் பிற்பகல் 4.30 மணியளவில் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் தொடர்பான செயலமர்வு/கூட்டம் முடிவுறுத்தப்பட்டது.