சமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இன்று (10.04.2019) சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் திருமதி க. சிவசம்பு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு. சி. குணபாலன் அவர்களால் சமுர்த்தி விற்பனை கண்காட்சியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


