மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில்  01.08.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில்  நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் திரு. றிசாட் பதியுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சபை அரச அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபை  தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட  திணைக்களங்களின் தலைவர்களும் சமூகமளித்திருந்தனர்.

இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்கள்,பிரச்சனைகள் போன்றவை கலந்துரையாடி தீர்வு காணப்பட்டதுடன் இறுதியில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனமும் வழங்கி வைக்கப்பட்டது.

DSC 0143

 

DSC 0154

 

DSC 0151

 

DSC 0150

 

DSC 0206

 

DSC 0228

 

DSC 0250

 

DSC 0251

 

DSC 0233

 

 

 

 

 

 

 

 

 

 

மன்னார்மாவட்டத்தின் 2019ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் கடந்த 16.07.2019 ( செவ்வாய்) அன்று பி.ப 2.30 மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. S. குணபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில்  பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு. C.A. மோகன்றாஸ்  அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக 05 பிரதேச செயலகங்களுடைய செயலாளர்கள்,தேனீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் MARDAP இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வில் 150ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 15ற்கும் மேற்பட்ட  போட்டிகள்  ஒழுங்கு செய்யப்பட்டன.

இந் நிகழ்விற்குரிய அனுசரணைகளை, அங்கவீனர்களுக்கான தேசிய செயலகம்,ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு  மற்றும் தேனீ  - மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட சுய உதவி அமைப்பு என்பனவும் மேற்கொண்டிருந்தன.

 

BA

 

BA 0001

 

DSC 0670

 

DSC 0667

 

DSC 0675

 

DSC 0901

 

DSC 0720

 

DSC 0735

 

DSC 0737

 

DSC 0741

 

DSC 0918

 

DSC 0885

DSC 0590

 

DSC 0872

 

DSC 0758

 

DSC 0957

 

DSC 0962

 

DSC 0050

 

DSC 0058

 

 

 

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட நல்லிணக்கக்குழு கூட்டமானது ஏப்ரல் மாதம் 30ம் திகதி பி.ப 2 மணியளவில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

மாவட்ட செயலாளர் திரு.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு குழு உறுப்பினர்களாக அதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குரு முதல்வர் வண.அருட்தந்தை விக்டர் சோசை, மௌளவி வண.எஸ்.ஏ.அசீம், வண.அப்போஸ்தலிக்க சபை போதகர் ஏ.நிமால் கூஞ்ஞ, வண.தர்மகுமார குருக்கள், வண.திரு.ஜி.அன்ரனி டேவிற்சன் மன்னார் நகர சபை தவிசாளர், வண.திரு.எஸ்.எச்.எம்.முஜாகிர் மன்னார் பிரதேச சபை தவிசாளர், வண.திரு.ஏ.ஜி.ஏ.சுபீகான் முசலி பிரதேச சபை தவிசாளர், மன்னார் நகர சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள்(மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி, மடு), திரு.சபுர்தீன் சிரேஸ்ட சட்டத்தரணி, திரு. கதிர்காமநாதன் சைவ மத ஒன்றியம்,திரு.திலீபன் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், திரு விக்ரமசிங்க மன்னார் நகர பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.புஸ்பகுமார சிலாவத்துறை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.வதுலியத்த இலுப்பைக்கடவை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.சசந்த அடம்பன் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.இ.ஜி.குணரத்ன உதவிஃதலைமையிடத்து ஆய்வாளர் மன்னார், திரு உடவத்த தலைமையிடத்து ஆய்வாளர் தலைமன்னார், திரு.சோமஜித் பேசாலை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, CCT நிறுவனத்தின் பணிப்பாளர் திரு ஜெகான் பெரேரா, திரு ஜோ வில்லியம் தவிசாளர், மன்னார் மற்றும் மடு பிரதேச பிரதி கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக மத ஒன்றிய தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

கடந்த 21ம் திகதி குண்டுதாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து மன்னார் மாவட்ட மக்களின் பாதுகாப்புக்காக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்ட பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

  1. 01. மன்னார் மாவட்டத்தில் 06 பௌத்த ஆலயங்களும், 142 கிறிஸ்தவ ஆலயங்களும், 80 முஸ்லிம் பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன. அங்கு வருகை தருகின்ற அனைத்து மக்களும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பரிசோதனை செய்து அனுப்பப்படுகின்றனர்.
  2. 02. தலைமன்னார் மற்றும் பேசாலை கடற்பரப்பினால் இந்தியா செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் அங்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
  3. 03. பொலிஸ் உதவியுடன் சாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
  4. 04. வழிபாடுகள் நடைபெறும்போது தலங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும்.
  5. 05. பாடசாலைகள் ஆரம்பிக்கும் நாட்களிலும் பின்வரும் நாட்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்விடயம் தொடர்பான அறிக்கைகள் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
  6. 06. யாருக்கேனும் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில் வெடிகுண்டுகளுக்கு மதம் மொழி தெரியாது என்பதால் இந்நாட்களில் நாம் மிக அவதானமாக இருக்குமாறும் எவரிலேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்காக மக்களின் விசேட உதவிகளை தாம் நாடி நிற்பதாக கூறினார்.

 

20190430 141925 20190430 142219 20190430 150653 20190430 154635 20190430 154657 20190430 154721

 

 

 

 

கிளை /பிரிவு : நிதி

இல

மக்களுக்கு வழங்கப்படும் சேவை

தேவை படும் ஆவணம்

சேவை நிறைவு செய்ய தேவை படும் காலம்

சேவை கட்டணம்

சேவை தொடர்பான நேரடி அரச அலுவலர்

பெயர்

தொலைபேசி  இல

01

பிரதேச செயலகங்களில் காணப்படும் ஓய்வூதியம் தொடர்பான நீண்ட கால பிரச்சனைகளை தீர்த்தல்.

உரிய பிரச்சனை தொடர்பான ஆவணங்கள்

02 வாரம்

இல்லை

பிரதம கணக்காளர்

023-2222214

02

சேவை வளங்குனர்களை வருடாந்தம் பதிவு செய்தல் (நவம்பர் மாதம் )

1.உரிய விண்ணப்பம்

2.வியாபார அல்லது கம்பனி பதிவு சான்றிதழ் பிரதி

3.பணம் செலுத்தியமைக்கான பற்று சீட்டு

4.ஊள்ளுராட்சி சபையில் பெறப்பட்ட வியாபார அனுமதி பத்திரம் நிழற் பிரதி

5 ஒப்பந்தகாரராயி ன் ICTAD/CIDA நிறுவனத்தில் பதிவுக்கான உறுதிபடுத்தபட்ட நிழல் பிரதி

6.உணவு வழங்கல் சேவையாயின்  குறித்த பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் /வைத்திய அதிகாரியிடம் பெறப்பட்ட சான்றிதழ் பிரதி

06 வாரம்

500/- (மாற்ற மடையக்கூடும்)

பிரதம கணக்காளர்

023-2222214

தலைமைத்துவ ஆளுமை விருத்தி எனும் தலைப்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த அருட்தந்தை லோறன்ஸ் அடிகளார் அவர்களால் மன்னார் மாவட்ட செயலக ஊழியர்களுக்கு இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை மாட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. சி. ஏ மோகன்றாஸ் தலைமையில் மிக சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில்  மடு பங்குகின் முன்னால் பங்குத்தந்தையும் குடும்பநல பணியகத்தின் தலைவருமான அருட்தந்தை எமிலியாஸ்பிள்ளை அவர்களும், மற்றும் பிரதம கணக்காளர், கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் நேர முகாமைத்துவம், வினைத்திறனான தொடர்பாடலின் அவசியம், தேவைகளை இனங்காணல் போன்ற விடையங்கள் மிக சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது..

 

AAD 03 01

சமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இன்று (10.04.2019) சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் திருமதி க. சிவசம்பு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு. சி. குணபாலன் அவர்களால் சமுர்த்தி விற்பனை கண்காட்சியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

4f28a370 5251 49a4 b5d3 3d6177896261 cef8fe38 89a3 4e3e 8e1d 952c3fc7975d IMG 5879c55b9b3e0bf0e760d4ddbda3c44a V21d1c2db 3935 48c1 aac5 d6840bf46d54 23da01ff 85b5 42f6 82ef 01d6dc41b008 7621235c 1fb4 4e81 b843 fd1c62e01304 a74fdcf1 6f0a 4237 931b bdfbcd433a3d e8e820d8 b28f 47f8 bdbb c4dc2901b4ca

 IMG 4029a0cbc2683c87a6a705f75ad7057f V

கூட்டறிக்கை – 28.03.2019

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள  முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல்.

உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின்  HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்திற்கு  அமைவாக,

மாவட்ட மற்றும்  பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற மீளாய்வு செய்தல் தொடர்பான கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரையின் கீழ்,

மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களின்  தலைமையில் 28.03.2019 அன்று மு.ப 09.30 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக தாமரை தடாகம் (ICT UNIT) மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு  தலைமை தாங்கிய மேலதிக அரசாங்க அதிபர் தமது உரையில் உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் சுற்றறிக்கைக்கு இணங்க இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்படுள்ளது என்றும் இங்கு சமூகம் அளித்து இருக்கும் அனைவரும் அமைச்சின் நோக்கம் நிறைவேறவும் மன்னார் மாவட்டம் இணைத்தள வடிவமைப்பு மற்றும் இற்றைப்படுத்தலை முன்னேடுத்து செல்ல  பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இக் கூட்டத்தில் மாவட்ட செயலக ICT  துறைக்கு பொறுப்பான அலுவலர்களும் 5 பிரதேச செயலகங்களில் தலா  02 அலுவலர்கள் வீதம்  10 அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

ICT பிரிவில் கடமை புரியும் திரு.க .பரத் என்பவரால் Internet, Intranet, Extranet சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு Joomla மென்பொருளின் தன்மை, அது இயங்கும் விதம், அதன் உட்கட்டமைப்பு, Software, Freeware, Shareware போன்றவைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் தேடல் பொறிகளும்,அரச  இணையத்தளங்களும் அதில் பிரசுரிக்கப்படும் ஆக்கங்களும் தேடல் பொறியின்  இயல்பான கட்டமைப்பு தொடர்பான விடயங்களும், இணையத்தளங்களே  எதிர்கால பிரதான தகவல் ஊடகம் என்பது பற்றியும் அவற்றைப் பாதுகாப்பானதாகவும்,வினைத்திறன் மிக்க வகையிலும் அரச சார்பான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் விதம் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் (05) இணைய தளங்கள் பார்வையிடப்பட்டு ,அவற்றுடன் பிற மாவட்ட இணையத்தளங்களும் ஒப்பு நோக்கி அவற்றில் இருக்கும் நல்ல விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டது.

உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின் HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்தின் இணைப்பான மாவட்ட மட்ட பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற படிவத்துக்கு அமைவாக எமது மாவட்டத்திற்குரிய 06 இணைய தளங்களும் தனித்தனியே ஆய்வு செய்யப்பட்டன.

 

IMG 19e893e81a332b3d7afb15a9890c9d21 V IMG ef908a5d374731710f45c232083f5689 V IMG e1dc8fe7b0926dc0f10fddea5f15161f V

 

11.00 am – 11.30 am   - சிற்றுண்டி இடைவேளை (Tea brake)

மேற்படி படிவத்திற்கு அமைய அவ் ஆய்வில் இனங்காணப்பட்ட இற்றைப்படுத்தப்படாத(Update)  தரவுகள் /தகவல்கள்  இனங்காணப்பட்டு அந்ததந்த பிரதேச அலுவலர்களினால் தரவுகள் இற்றைப்படுத்தப்பட்டது. மேற்படி இற்றைப்படுத்தலின்  போது இணையதளத்தின் இயக்க வேகமானது வெகுவாக குறைத்து இருந்ததால் இற்றைப்படுத்தலின்  வேகத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் மேற்படி விடயத்திற்கு பொறுப்பதிகாரியான இலங்கையின் ICTA  வில் கடமைப்புரியும் கருத்திட்ட முகாமையாளர் பாக்யா குமாரசிங்க அவர்களுக்கு மின்னஞ்சல் ,தொலைபேசி ஊடாக முறைப்பாடும் அளிக்கப்பட்டது .

தொடர்ச்சியாக அலுவலர்கள் தரவு இற்றை படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து இணையத்தளங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான விடயங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த படியினால்,அவற்றிற்கு என தனியான கோப்பு (File) முகாமைத்துவம் செய்வதுடன் உரிய அலுவலர்களின் அனுமதிப்பெற்று அவர்களின் மேற்பார்வையில் செய்திகளை இற்றைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

1.30 pm -2.30 pm – lunch time

மேலும் மேலதிக செயலாளரினால் இணைக்கப்பட்ட மேற்படி கடிதத்தின் படிவத்திற்கு அமைவாக 31.03.2019 திகதிக்கு முன்னராக இற்றைப்படுத்தும் பணிகளை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக இவ் இற்றைப்படுத்தல் பணியில் பிரதேச செயலக பிரிவில் கடமை புரியும் அலுவலர்கள் எதிர் நோக்கும் கீழ்வரும் பிரச்சனைகள் இனங்காணப்பட்டது.

  • மேற்படி இற்றைப்படுத்தல் பணிக்கான கடமை அறிவுறுத்தல் கடிதமானது குறிப்பிட்ட அலுவலர்களுக்கு இதுவரையில் கையளிக்கப்படாமை.
  • கணினி மற்றும் இணைய வசதி குறைவாக உள்ளமையும் பிரதானமாக பிரச்சினையாக இனங்காணப்பட்டது.

3.15 pm -3.30 pm – Tea time

அலுவலர்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் சேகரிக்கப்பட்டு தொடர்பாடல்களை மேலும் இலகுபடுத்தல் தொடர்பான “ICT MANNAR”  எனும் பெயரில் Viber  மூலம்  குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

தொடர்ச்சியாக இப் பயற்சி தொடர்பான நிறை, குறைகள் பயிற்சியில் பங்குபற்றியவர்களிடம்  வினவப்பட்டதுடன் பிற்பகல் 4.30 மணியளவில் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் தொடர்பான செயலமர்வு/கூட்டம்  முடிவுறுத்தப்பட்டது.

வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாண ஹொக்கி போட்டியில் மன்னார் மாவட்ட ஆண்கள் அணியினர் முதலாம் இடத்தினையும், மன்னார் மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும், மற்றும் பயிற்றுனர்களுக்கும் எமது மாவட்ட செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

 

IMG 7b99f016fdcf5200f6567931ad30e6cf V

 

IMG 2cbd1e61c6e2d3e32172f002d23afa5a V

அனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான  கருத்தரங்கு மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 60 உத்தியோகத்தர்களுக்கு  மன்னார் மாவட்ட அனர்த்த முகாமை ஒருங்கிணைத்தல் பிரிவினால் 02.04.2019 அன்று நடாத்தப்பட்டது.

FB IMG 1554556983071

FB IMG 1554556986551

 

 

 

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நேரடிக்கண்காணிப்பு மற்றும் வழிநடத்தலில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்விற்கு சமாந்தரமாக மேற்கொள்ளும் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக 'சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு
 (03.04.2019) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது .
இன் நிகழ்வில் போதைப் பொருள் பாவனையின் அபாயம் தொடர்பாகவும்,  அதை கட்டுப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் தூரநோக்கு சிந்தனைக்கு வலுவூட்டும் வகையில்  அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு உறுதி பூணுமாறும்  அறிவிக்கப்பட்டதோடு அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.
 
 
FB IMG 1554525364650
 
FB IMG 1554525374146
 

யுத்த இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் பற்றிய விளக்க கருத்தரங்கானது மன்னார் மாவட்ட செயலகத்தில் 5.4.2019 வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொள்கைகள் , பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் போன்ற விடையங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் வளவாளராக திரு. என். புகேந்திரன் கலந்துகொண்டார்.
இக்கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், 5 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என 200ககும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

IMG 2c48d32c1a406b9ac29bcd743f1fd26e V

IMG 4bf3bdb8add48cab3b4e4f8a537882a7 V

 

IMG ccff740e32b599ef9735a22a0fd68971 V

 

பிரதேச செயலக பிரிவு ரீதியாக நிலபரப்பு. 

Divisional Secretariat

Area  (Km²)

Percentage

Mannar Town / மன்னார் நகரம்

226.9

11.33

Nanattan / நானாட்டன்

129.3

6.46

Musali / முசலி

474.2

23.69

Manthai West / மாந்தை மேற்கு

658.9

32.91

Madu மடு

512.8

25.61

Total /மொத்தம்

2002.1

100.00

 

Untitled

 

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும் 

 

 

 

 

 

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (கலைக்கிராமங்கள் உருவாக்குதல்) மன்னார் மாவட்டத்திலிருந்து கலைஞர் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (02.04.2019) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

 

01

 02

 

03

 

04

மன்னார் மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உயிர் காப்புச் சங்கம் மற்றும் பீப்பிள் லீசிங் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் எருக்கலம்பிட்டி கல்லடி களப்பு பகுதியில் 27.03.2019 அன்று ஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் பணிப்பாளர், பீப்பிள் லீசிங் முகாமையாளர், ஊழியர்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியாகத்தர்கள், தப்ரபேன் கடலுணவு ஏற்றுமதி நிறுவனத்தினர் என பலரும் கலந்து கொண்டு கண்டல் மரங்களை நாட்டி வைத்தனர் இந் நிகழ்வுகளை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இயங்கும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள: சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர்.

 
AB
AF
AS

It is evident that this District has its historical importance for many reasons and being one of the main coastal areas of the country, in the past , the western invaders had, had landed here and the monuments left behind by them bear witness and to mention some of them are the “Forts” built at Mannar-Town and Arippu. The Ramar-bridge, hanging-bridge, Thiruketheeswaram-temple, Madhu-St.Mary’S Church, Light-house and the huge Baobab-tree speak of themselves with regard to the historical importance of this District.

ramarbridhe

This bridge was construct of sand and Lime-stones, in order to connect India and Sri Lanka. Bridge is called as Adam-bridge (Ramar-bridge) in the Tamil language, as Adams-bridge in the English-language and as Rama-sethu, in the language of Malayalam. This appears to be a sand-bund in length of 30 kilometres and 1.5 meter – 3.5 meter, above the water –level. In accordance with the historical entries it is said that there had been transportation using this bridge prior to the 15th Century.

 

thirukedeswaram

 

bob tree

                                                                                   Mdhu Church

Madhu

 

bridge

 

light house

 

arippu

 

 

fort

 

 

 

 

ஆவணங்கள் பதிவு செய்வதற்கான விரைவான ஒருநாள் சேவை' எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டம் கடந்த 16.03.2019 சனிக்கிழமை அன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
உள்ளக, உள்நாட்டலுகல்கள் , மாகான சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் பணிப்புரைக்கு இணங்க பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட செயலக காணி பதிவகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. றிப்கான் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். 
விருந்தினர் வரவேற்பு, வரவேற்புரை, வரவேற்பு நடனம் என்பவற்றை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக உறுதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்த இருவருக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக திணைக்கள தலைவர்கள் சட்டத்தரனிகள் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

AA1

AA5

AA7

 

AA9

AA10

 

AA8

 

மன்னார் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின விழாவும் சாதனைப்பெண்கள் கௌரவிப்பு விழாவும் 08.03.219 அன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் நகரசபை மண்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. சி.  குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி.ஏ. மோகன்றாஸ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக முசலி பிரதேச செயலாளர் திரு. கே.எஸ் வசந்தகுமார், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பிறின்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர். 
இவர்களுடன் மன்னார் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் அலுவலர்கள், மன்னார் நகர பிரதேச செயலக அலுவலர்கள் , மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் வரவேற்பு நடனம், சிறப்புரை என்பவற்றுடன் மன்னார் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய பெண்களுக்கு 'சாதனைப்பெண்கள்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


ஹிட் (HIT) சந்தைப்படுத்தல் நிறுவனம், வேல்ட் விசன்  , TVS, ஒஸ்ரியா நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டன.

 

 20190308 112039

 

20190308 110026

 

20190308 112039

 

மனானார் மாவட்டத்தில் 2019ம் ஆண்டில் சாதனைப்பெண்கள் விருதினை பெற்றுக்கொண்டவர்கள் விபரம்
1) வைத்திய கலாநிதி திருமதி ஸ்ரெலா யூட்  ரதினி (மருத்துவ துறை: இளைப்பாறிய வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்)
2) திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் (கல்வித்துறை : இளைப்பாறிய மன்னார்,மடு வலயக்கல்விப் பணிப்பாளர்)
3) திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்றன் (கல்வித்துறை : இளைப்பாறிய மடு, முல்லைத்தீவு, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர்)
4) திருமதி விக்ரர் பெப்பி பெப்பெற்றுவா மதுரநாயகம் பீரிஸ் ( கல்வித்துறை, எழுத்தாளர்: இளைப்பாறிய உதவிக்கல்விப்பணிப்பாளர்)
5) திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் (நிர்வாகத்துறை: மேலதிக பிரதம செயலாளர். வட மாகாணம்)
6) கலாநிதி திருமதி கிமலதா ராஜேஸ்வரன் (கலாநிதி பட்டம் பெற்ற முதல் பெண் - மன்னார் மாவட்டம்)7
7) செல்வி வெற்றிச்செல்வி சந்திரகலா (எழுத்தாளர், உளசமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சார் செயற்பாட்டாளர்)
8) செல்வி அன்ரனி ஜெனிபர் அருள்மொழி லம்பேட்( மாற்றாற்றல் உள்ள பட்டதாரி ஆசிரியர். பாடகி, எழுத்தாளர்)
9) திருமதி நேசராசா சுகந்தினி (மாற்றாற்றல் உள்ள பெண், பரா ஒலிம்பிக் 2020ற்கு தெரிவாகியுள்ளவர்)
10) செல்வி  செபமாலை பெனடிற்றா (மாற்றாற்றல் உள்ள பட்டதாரி ஆசிரியர்)
11) செல்வி மரியநாதன் ஜேசப்பின் பிரஸ்ஷh லேனா (ஊடகத்துறை - நிகழ்ச்சி தயாரிப்பாளர்)
12) திருமதி எம். கௌரி (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
13) திருமதி செலமன்ராஜ் சுபாஜினி (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
14) திருமதி  வீரபுத்திரன் கலாதேவி (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
15) திருமதி விக்கிரமசிங்க சவரியம்மா (சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்)
16) செல்வி பாலகிருஸ்ணன் பிரியங்கா (விளையாட்டு துறை - தேசிய மட்டம்)
17) செல்வி சந்தியோகு ஆன் பைரவி (விளையாட்டு துறை - தேசிய மட்டம்)
18) செல்வி சௌந்தர்ராஜன் பிரியதர்சினி (விளையாட்டு துறை - தேசிய மட்டம்)
19) திருமதி ரமேஸ் வசந்தராதேவி (சமூக சேவையாளர்)
20) திருமதி செயஸ்ரியாம்பிள்ளை சத்தியகுமாரி (சமூக சேவையாளர்)

 

 

அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் மன்னார் மாவட்டத்துக்கென மூன்று தண்ணீர் பௌசர்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. அவற்றை மன்னார் மாவட்ட செயலாளர் சி. எஸ் மோகன்றாஸ் அவர்கள் மடு நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர்களின் ஊடாக வழங்கிவைத்தார்.

 

52927559 352087848728864 2545073636788666368 n 

52983095 352087768728872 3836903789726531584 n

 

இலங்கையின் எழுபத்தியொராவது சுதந்திர தின நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலமையில் இன்று(4)காலை யில் நடைபெற்றது.

 

51217592 1184205931748114 6623536338681462784 n

 
51479917 1184206325081408 3908149789564338176 n

This page is under construction