Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

OUR DISTRICT SECRETARY

Mr.M.Y.S.DESHAPRIYA

Search

வடக்கு தெற்கு கலாசார பரிமாற்ற நிகழ்வு 08.07.2016 – 11.07.2016


வடக்கு தெற்கை இணைக்கும் பாலமாக மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் தென்மாகாண கலாசார இளைஞர் விவகார சேவைகள் அமைச்சும் இணைந்து ஆடி மாதம் 8ம் திகதி தொடக்கம் 11ம் திகதி 2016 வரை மாத்தறை மாவட்டத்திற்கு சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு அங்கு இன்னிசை நிகழ்ச்சி மற்றும் Home Stay Programme இனை MANO [Mannar All Nation Organization] நிறுவனத்தின் அனுசரணையுடன் நடாத்தினர்.


இதன் முதற்கட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் 2014ம் ஆண்டு மார்கழி மாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் தென்மாகாண கலாசார இளைஞர் சேவைகள் அமைச்சின் கௌரவ அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் அலுவலர்கள், மன்னார் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கலாசார உத்தியோகத்தர்கள், MANO நிறுவன பொருளாளர், பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்ட மாணவ குழுக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.