Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

OUR DISTRICT SECRETARY

Mr.M.Y.S.DESHAPRIYA

Search

தேசிய பாவனைக்குதவாத பொலித்தீன் பிளாஸ்ரிக் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம் (24.10.2016 - 30.10.2016)

தேசிய ரீதியில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் 24.10.2016 தொடக்கம் 30.10.2016 வரை பொலித்தீன் பிளாஸ்ரிக் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரமாக நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இதற்கான மாவட்ட மட்ட வைபவ ரீதியான நிகழ்வு மன்னார் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை, பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் மற்றும் மன்னார் நகர சபையினால் 25.10.2016 அன்று 10 மணியளவில் மன்னார் நகர சபை பொதுவிளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.


இச் சிறப்பு நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.எம்.வை.எஸ் தேசப்பிரிய அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.செபஸ்ரியான் மற்றும் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.எம்.ஜே.துரம், UNOPS நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் திரு.எக்ஸ்.எல்.ரெனால்ட் செயலாளர் மன்னார் நகர சபை, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னார் சித்தி விநாயகர் இந்துக்கல்லூரி மற்றும் மன்னார் வட்டக்கண்டல் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


பாவனைக்காலம் முடிவடைந்து அல்லது பழுது பார்க்க முடியாத கழிவாக அகற்றப்படும் இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களே  e Waste என்கின்றோம். இயற்கை அழிவுக்கு உட்படாத பார உலோகங்களான பாதரசம், ஈயம், கட்மியம், ஆசனிக், குரோமியம் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பதார்த்தங்களை இவை கொண்டுள்ளது. மேலும் இவற்றை ஏனைய திண்மக்கழிவுகளுடன் சேர்த்து கழிவகற்றல் செய்யும்போது மனிதனுக்கும், சுற்றாடலுக்கும் பாரிய தீமைகளை ஏற்படுத்துகின்றன.


எனவே இக்கழிவுகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி முகாமை செய்வதற்காக மின்கழிவு சேகரிப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.


இதன் பொருட்டு மாவட்ட செயலகத்தில் நாளைய தினம் 10:00 மணியளவில் மின் கழிவு சேகரிப்பு நடைபெறும்.