மன்னார் மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்களுடனான கூட்டம்

மன்னார் மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்களுடனான கூட்டம் இன்று(25) மாலை 3 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்டான்லி டிமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை
1.ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலைைங்களை காலை 11 மணிக்கு பின்னரே ஆரம்பிக்க வேண்டும்.
2.கிழமையின் ஏழு நாட்களிலும் மாலை 6 மணியுடன் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
3.பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள் அவசரமாக பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் மாணவர்களின் ஒழுக்கம், ஆன்மீகம் போன்றவற்றில் தனியார் கல்வி நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும். உரிய இருக்கை வசதி,சுத்தமான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெளிவூட்டினார்.
குறித்த கூட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள், மன்னார் பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், தனியார் கல்வி நிலையங்களின் பிரதிநிதிகள், மாவட்டச் செயல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
345464073 957244495472603 3196710145637100545 n 346633210 2702172903255449 4438415383440563246 n
 
346665873 942205000446624 8157093862998639155 n 347432503 6698490926862442 8136586734835292306 n