Government Agent/District Secretary

K.Kanakeshwaran

 

Mr.K.KANAKESHWARAN

Telephone No - 023-2222235

Fax - 023-2222232

E-mail - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

Scan this QR code using your mobile camera

to access the IAU Complaint Portal

News & Events

மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் 2026 தயாரிப்பு பூர்த்தி

காணிப் பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் மாவட்ட காணிப்பயன்பாட்டு அலுவலகத்தால் மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம்தயாரித்தல் தொடர்பான இறுதி பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் 01.09.2026 இன்று மாவட்ட செயலாளரின் தலைமையில் மாவட்ட செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உதவிப் பணிப்பாளர் (காணிப் பயன்பாடு) அவர்களினால் இத்திட்டம் தொடர்பான விரிவான PowerPoint Presentation முன்வைக்கப் பட்டது. இத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய...

சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம்

சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம்: மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்தரையாடல்! 2026 ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள்முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்தரையாடல், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 20.08.2026 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. நிதி, திட்டமிடல் மற்றும்...

9 ஆண்டுகால அர்ப்பணிப்பான சேவைக்கு கௌரவம்

வவுனியா மாவட்டத்திற்கு இடமாற்றலாகிச் செல்லும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு. கனகரெத்தினம் திலீபன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா, மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மன்னார் மாவட்டத்தில் சுமார் ஒன்பது ஆண்டுகளாக அனர்த்த முகாமைத்துவ பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்த திரு. திலீபன் அவர்கள், பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசரகால...

மன்னார் மாவட்ட செயலகத்தில் கிரீடா சக்தி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதையும், பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட கிரீடா சக்தி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஹலீம்தீன், கல்வி பிரதிப் பணிப்பாளர் திரு. ஞானராஜ், கல்வி உதவிப் பணிப்பாளர் திரு. பிர்காஷ், திரு....

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பிறந்தநாள் நிகழ்வு

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் இன்று (14.08.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசாங்க அதிபர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டமும் இடம்பெற்றது. இதன்போது மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு,...

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புதிய பிரதிப் பணிப்பாளர் கடமையேற்பு

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பணிப்பாளர் திரு. சூரியராஜா அவர்கள், இன்று (10) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த கடமையேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அனர்த்தம்வமைத்துவ உதவி பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டனர்.  

பண்பாட்டுப் பெருவிழா நானாட்டான்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் நானாட்டான் பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழாவும் நானிலம் பிரதேச மலர் வெளியீடும் இன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்...

பண்பாட்டு விழா மன்னார் நகரம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் நகரம் பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப்பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டு விழா இன்று மன்னார் நகர மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது மன்னார் நகரம் பிரதேச செயலாளர் காந்திராசா காந்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் துறைசார் விருந்தினராக மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ...

பண்பாட்டுப்பெருவிழாவும் மடுக்கீற்று பிரதேச மலர் வெளியிடும்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்டாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மடு பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப்பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப்பெருவிழாவும் மடுக்கீற்று பிரதேச மலர் வெளியிடும் இன்று பெரியபண்டிவிரிச்சான் மரிய கொறற்றி தேவாலயத்தின் மைதானத்தில் சிறப்புற நடைபெற்றது மடு பிரதேச செயலாளர் இ கி அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க,கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும்,சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர்...

மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நேர்மை வாரம் இன்று (27.07.2026) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று காலை “சட்டத்தை மதிக்கும் நேர்மையான அரச சேவை” என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய நேர்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் சிறப்பம்சங்கள் மன்னார் மாவட்ட அரசாங்க...

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு க...

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22.07.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க . கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்...

துவிச் சக்கர வண்டி வழங்கும் வேலைத்திட்டம்

மன்னார் பாடசாலைகளில் மாணவர்களினை கல்வி கற்பிப்பதில் நெருக்கடியினை எதிர்நோக்ககின்ற குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான துவிச் சக்கர வண்டி வழங்கும் வேலைத்திட்டம் 2026.07. 20ஆம் திகதி மாவட்டச் செயலாளர் திரு K.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையிலே இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த கல்வி கற்கும் 25 பாடசாலை மாணவர்களுக்கு முத்து தம்பி தில்லை நடராசா குடும்பத்தினரின் (சுதுமலை, மானிப்பாய்)நிதி அனுசரணையின் கீழ் மாவட்ட செயலாளரினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந் நிகழ்வில்...

மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்கள் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்கள் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (17.07.2026) மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள சமாதான நீதவான்களை ஒருங்கிணைத்து, அவர்களின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் சமாதான நீதவான்களின் ஒற்றுமை, சமூக சேவைகளில் அவர்களின் பங்களிப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இதன்போது மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்கள்...

புதிதாக நியமிக்கப்பட்ட 17 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள்

இன்று (17.07.2026), மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட 17 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி, தங்களது அரசுப் பணிகளை நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளுமாறு வாழ்த்துகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்டச் செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்....

எல் நினோ தாக்கம்-மன்னாரில் விசேட விவசாயக் குழுக் கூட்டம்

எதிர்வரும் எல் நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்ளும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட விவசாயக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் இன்று (15) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. எல் நினோ காலநிலை மாற்றம் விவசாயத் துறையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அதனை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பயிர்ச்செய்கைத் திட்டமிடல் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது...

சாம்பியன் பட்டம் வென்ற மன்னார் மாவட்ட அணிக்கு மாவட்ட செயலகத்தில் அமோக வரவேற்பு

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்களைச் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய அணிகளுக்கிடையில் வருடாந்திரமாக நடத்தப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான (Season 05) கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 11.07.2026 அன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய மன்னார் மாவட்ட அணி,...

பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான கிரிகட் சுற்றுப்போட்டி - 2026

CHAMPIONS - MANNAR DISTRICT வடமாகணத்தின் 5 மாவட்டங்களின், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய அணிகளுக்கிடையிலான கிரிகட் சுற்றுப்போட்டியானது ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவடத்தில் நடைபெறும். அந்தவகையில் இவ்வருடத்திற்கான கிரிகட் போட்டியானது 11.07.2026 ஆம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முதல் சுற்றில் 5 அணிகளும் லீக் முறையில் விளையாடி முதலிரு இடங்களை பிடித்த மன்னார் மாவட்ட...

அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு உடனடி தீர்வுகள் மாவட்ட செயலாளர்கள் மாநாடு ஜனாதிபதி தலைமையில்... - அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு - யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு உடனடி தீர்வுகள் - தரமான அரச சேவைக்காக அரச துறையில் விரிவான மறுசீரமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிடப் புனரமைப்புப் பணிகளை, மத்திய...

மன்னார் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் – 2026

மன்னார் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் – 2026 விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (07) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொடக்க நிகழ்வாக மன்னார் மாவட்டச் செயலகம், நானாட்டான் பிரதேச செயலகம், மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மன்னார் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர்களுக்கிடையிலான சதுரங்கப்...

மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது அரையாண்டுக்கான விலை நிர்ணயக் கூட்டம்

மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது அரையாண்டுக்கான விலை நிர்ணயக் கூட்டமானது மன்னார் மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று(25) இடம்பெற்றது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய பல்வேறு காரணிகள் தொடர்பாகவும் துறைசார் அதிகாரிகளோடு கலந்துரையாடப்பட்டமைக்கு அமைவாக பல்வேறு பொருட்கள் , சேவைகளுக்கான விலைகள் இக்கலந்துரையாடல் மூலமாக மீள் நிர்ணயம் செய்யப்பட்டன. இதன்போது, மணலுக்கான நிர்ணய விலைகளும் மாற்றியமைக்கப்பட்டன. இதற்கமைய, மணல் யார்ட் (மணல் ஸ்டோர்) உள்ள இடங்களில் மணலைப்...

« »

LOGO

logo

 VISION

PIONEERING THE SUSTAINABLE DEVELOPMENT PROCESS OF MANNAR DISTRICT TO UPGRADE THE LIVING STANDARD OF THE PEOPLE

 

MISSION

COORDINATING AND MONITORING THE ACTIVITIES OF ALL

 INSTITUTIONS INCLUSIVE OF PUBLIC AND PRIVATE IN ORDER TO

IMPROVE THE PERFORMANCE AND DELIVER SUSTAINABLE SERVICES

EFFICIENTLY AND EFFECTIVELY TO SATISFY THE ASPIRATIONS OF THE

GOVERNMENT AND THOSE OF THE PUBLIC AT LOW COST WITH CARE

AND CAUTION