மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (29) பிற்பகல் 2 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் , வினோதநோகராதலிங்கம் , திலீபன் மற்றும் வட மாகாண பிரதம செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் , ஆணையாளர்கள் , பணிப்பாளர்கள் , திணைக்கள அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்துக்குரிய அனுமதி பெற வேண்டிய திட்டங்கள் தொடர்பான அனுமதி வழங்குதல், இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவான முன்னேற்ற நடவடிக்கைகள், மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் மிக விரிவாக ஆராயப்பட்டன.
 
a1a2
a3a5