மதிப்புக்குரிய அரசாங்க அதிபர் அவர்களின் சிந்தனைக்கமைவாக ஆரம்பிக்கப்பட்ட 'அறிவுப்பரிமாற்றம்' செயற்பாட்டின் முதலாவது நிகழ்ச்சி (3.1.2024) பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்தொடரின் முதலாவது நிகழ்வினை மன்னார் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. சிவராஜா அவர்கள் வழங்கினார். இன்றைய நிகழ்வின் கருப்பொருளாக, அலுவல முகாமைத்துவ செயற்பாடுகள், ஊழியர் ஒருவர் அலுவலகத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், நடத்தைச் செயற்பாடுகள், இலக்கு, நோக்கு, தூரநோக்கு எவ்வாறு அமைகின்றது போன்ற விடயங்களை மிகவும் உற்சாகமூட்டும் வகையில் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் மதிப்பக்குரிய மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் உட்பட சகல பதவி நிலை உத்தியோகத்தர்கள், மற்றும் சகல அலுவலக பணியார்கள்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.







