76வது சுதந்திர தின நிகழ்வு
==================
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.
தேச விடுதலைக்காக போராடி உயிர்நீர்த்த அனைவருக்கும் இரண்டு நிமிட நேர அமைதிபிராத்தனை இடம்பெற்றது. அத்தோடு சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களும், பலூன் பறக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வமதகுருமார்களின் ஆசியுரைகளுடனும் நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து சமாதானத்தை வலியுருத்தும் வரவேற்பு நடனம் மாவட்ட மற்றும் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது. வரவேற்புரையினை மேலதிக மாவட்ட செயலாளர் திரு. ய. பரம்தாமன் அவர்களால் வழங்கப்பட்டது. 76ம் ஆண்டுக்கான சுதந்திர உரையானது மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. க. கனகேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ந்து சர்வமதத்தலைவர்கள் மற்றும் பாண்ட் வாத்தியக்குழு மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிறைவில் நன்றியுரையினை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் ( காணி) ம. சிறிஸ்கந்த குமார் அவர்கள் வழங்கி வைத்தார், தொடந்ர்து சர்வமத தலைவர்கள், வருகை தந்திருந்த விசேட விருந்தினர்களுடனான மரநடுகை நிகழ்வுடன் 76வது சுதந்திர தின வைபவம் நிறைவு பெற்றது.
மேற்படி நிகழ்வில் பொலிஸ் பொறுப்பதிகாரி, முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளககணக்காய்வாளர். பிரதேச செயலாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள். கிளைத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.














