மன்னார் பிரதேசச் செயலகம் மற்றும் அட்ரா நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் சந்தை (05.03.2024) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.மன்னார் பிரதேசச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.







