மன்னார் மாவட்ட அபிவிருத்தி சபையின் புலம்பெயர்ந்த உறவுகளின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் உணவு உற்பத்திகளின் விற்பனை நிலையம் மற்றும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரண நிலைய திறப்பு விழா மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 21.03.2024 காலை 8:30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக தரைத்தளத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் உணவு உற்பத்திகளின் விற்பனை நிலையத்தையும் மற்றும் வரிய மாணவர்களுக்கான கற்றல் உபகரண நிலையத்தையும் திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்கள், மேலதிக அரசாங்க அதிபர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், புலம்பெயர் உறவுகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள், உதவி மாவட்ட அரசாங்க அதிபர், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உள்ளூர் கைத்தொழில் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேற்குறிப்பிட்ட இரு விற்பனை நிலையங்களும் மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
shopop1 shopop2
 
shopop3 shopop4
 
shopop5 shopop6
 
shopop7 shopop8
 
shopop9