சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "ரன்விமன" விசேட திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு இன்றைய தினம் (03.04.2024) மதிப்பிற்குரிய மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களால் குறித்த பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது இன்று காலை 11.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமானது. திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட சொர்ணபுரி கிராம அலுவலர் பிரிவின் திருமதி.M.F.F.பஸ்லா அவர்களிடம் மதிப்பிற்குரிய மாவட்ட செயாலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களால் புதிய வீடு கையளிக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக பதில் கடமையாற்றும் எமது உதவிப் பிரதேச செயலாளர், அபிவிருத்தி அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் மற்றும் கிராம அலுவலர் கலந்துகொண்டிருந்தனர்.