மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் (2024-06-11) செவ்வாய்க்கிழமை மாலை 2 மணி அளவில் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை , மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் உற்பட அழைக்கப்பட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக இராணுவம்,பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக குடி நீர், போக்குவரத்து, சுகாதாரம்,வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
01az02
03