மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பங்கேற்போடு 12.06.2024 அன்று மன்னார் மாவட்டச் செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் காற்றாலை செயற்றிட்டம், கனிய மணல் அகழ்வு, பூரணப்படுத்தப்படாமல் உள்ள வீதிகள், காணிப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும், வீதி அபிவிருத்தி சம்பந்தமாகவும், போக்குவரத்து, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை, கல்வி, சுகாதாரம், மீன்பிடி, நீர்ப்பாசனம் தொடர்பிலும் இன்றைய தினம் விரிவாக ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டன .
மேலும் இக் கலந்துரையாடலில் வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாணசபை மற்றும் மன்னார்மாவட்ட திணைக்களத்தலைவர்கள , வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
dcc243 Dcc 242
 
Dcc 244 Dcc 245
 
Dcc 246