மன்னார் மாவட்ட பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்கள், தளபாட பற்றாக்குறை, மாணவர்கள் கற்றலுக்கு ஏதுவான கட்டிடங்கள் இல்லாமை போன்ற பல்வேறு தரப்பட்ட பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் முன்னிலையில் 12.06.2024 அன்று மாலை 2 மணி அளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.
 
Dcc 247 Dcc 248
 
Dcc 2410