மன்னார் மாவட்டத்தின் விளையாட்டு துறையின் அபிவிருத்தி செயல்பாடுகளினை முன்னெடுப்பதற்காகவும், எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தி சிறந்த முறையில் நடாத்தி செல்வதற்குமான கலந்துரையாடலானது மாவட்ட செயலாளர் தலைமையில் 2024.08.08 ஆம் திகதி மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் காலை 10 மணி அளவில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தின் விளையாட்டு துறையின் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
மேலும் பல்வேறு விளையாட்டுத் துறையினை மேம்படுத்து முகமாக ஒவ்வொரு விளையாட்டுத்துறைக்குமான பொறுப்பான குழு உறுப்பினர்கள் அன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
sm1 sm2
 
sm3 sm4
 
sm5 sm6