மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு பிறந்த தின விழா இன்று(2024.08.14) மாவட்ட செயலக நலம்புரிச் சங்கத் தலைவர் திரு. செல்வகுமார் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த பொன்விழா நிகழ்வை முன்னிட்டு விவசாயிகளுக்கான காப்புறுதி சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் மாவட்ட செயலக வளாகத்தினுள் மோட்டார் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டதோடு மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக சிரேஷ்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்கள் சார்பாகவும் எங்கள் அரசாங்க அதிபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
GA50 1 GA50 2
 
GA50 3 GA50 4
 
GA50 5 GA50 6
GA50 7 GA50 8
 
GA50 9