இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் விருது வழங்கும் விழாவானது 15.08.2024 அன்று வவுனியா நோர்த்வே ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் பணம் சேகரிப்புத் திட்டத்தில் சாதனை மட்டத்தினை எய்திய மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மதிப்பளிக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் கெளரவத் தலைவர் திரு. பி. எஸ். எஸ். டிக்வெலா அவர்களும், சிறப்பு விருந்தினராக சபையின் பொது முகாமையாளர் திரு. கே. ஏ. எஸ். பி. களுராட்சி அவர்களும், கெளரவ விருந்தினராக சபையின் பிரதிப் பொது முகாமையாளரான திருமதி கல்ஹாரி டி. சில்வா அவர்களும், சிறப்பு அழைப்பாளராக சபையின் மேம்படுத்தல் உத்தியோகத்தர் திரு டி. எல். லக்மல் அவர்களும் பங்குபற்றினார்கள்.
வடக்கு , கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.






