அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 1655 பயனாளிகளில் முதற்கட்டமாக மன்னார் நகரப் பகுதிக்கு உட்பட்ட துள்ளுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 8 கிராமங்களை சேர்ந்த 461 பயனாளிகளுக்கும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட பாலியாறு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மூன்றாம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 255 பயனாளிகளுக்குமாக மொத்தம் 716 பயனாளிகளுக்கு இந்தியா அரசினால் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கௌரவ பாராளுன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , யாழ் இந்திய துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி உட்பட யாழ் இந்திய துணை தூதரக அதிகாரி மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட குறித்த பகுதி கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
IR1 IR2
 
IR3 IR4
 
IR5