வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழா 17.12.2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மன்னார் பிரதான பாலத்தில் இருந்து பண்பாட்டு ஊர்திகள் மற்றும் கலை ஆற்றுகைகள் பண்பாட்டு பவனியாக நகரசபை மண்டபம் நோக்கி வருகை தந்ததுடன், விருந்தினர்களால் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டு பார்வையிடப்பட்டது. அதன் பின்னர், கலைத் தவசி கலைஞர் (குழந்தை) செ.செபமாலை அரங்கில் தமிழ்த்தாய்க்கு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மலர் மாலை அணிவித்து பெருவிழாவை தொடங்கி வைத்தார்.



பெருவிழாவில் தமிழ் தாய் வாழ்த்து, மங்கள இசை, வரவேற்பு நடனம், இசை நிகழ்வு, கண்டிய நடனம், றபான் நடனம், உழவர் நடனம், வாழ் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. மேலும், "வடந்தை-2024" எனும் நூல் வைபவ ரீதியாக வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கலைக்குரிசில் விருது, 2023 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான பரிசு மற்றும் இளங்கலைஞர் விருது உள்ளிட்டவை வழங்கப்பட்டன.



இந்த மாகாண பண்பாட்டுப் பெருவிழா மன்னாரின் பண்பாட்டு சிறப்பை வெளிப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.

cultural1  cultural2

cultural3  cultural4

cultural5  cultural6

cultural7  cultural8

cultural9  cultural10

cultural11