தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்களிலும் அரச அலுவலகங்களிலும் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் முதல் நிகழ்வாக ஈகைச் சுடர் ஏற்றி உயிரிழந்த உறவுகளுக்காக ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
பின்னர் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலைவர்களின் ஆத்ம சாந்தி நினைவு உரைகளும், அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப்பணிப்பாளரது விளக்கவுரையும் நடைபெற்றன. சிறப்புரையினை அரசாங்க அதிபர் நிகழ்த்தினார்.
இதன் போது, தேசிய பாதுகாப்பு தினத்தின் முக்கியத்துவம், சுனாமி பேரலையின் தாக்கம், அவ்வேளையிலான பாதுகாப்பு, முன்னேற்பாடுகள், மக்களிடம் ஏற்பட வெண்டிய அனர்த்தகால விழிப்புணர்வுகள் குறித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அத்துடன், சுனாமி அழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்டநிலையில் அவ் அனர்த்தில் இலங்கையில் பலியான 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறவுகளின் ஆத்ம சாந்திக்கு அனைவரும் பிரார்த்திக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
இன்றைய தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
tsunami1 tsunami2
 
tsunami3 tsunami4
 
tsunami5 tsunami56
 
tsunami7 tsunami8
 
tsunami9 tsunami10