மன்னார் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தினால் நடாத்தப்படும் வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு 17.01.2025 அன்று காலை 9.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலக நலன்புரிச் சங்க தலைவரும் மற்றும் கணக்காளருமான திரு. செல்வகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் உட்பட மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











