மன்னார் மாவட்டத்தில் இயங்கு நிலையில் இருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான முன்னேற்ற ஆய்வு கூட்டம் நேற்று(23) மன்னார் மாவட்ட செயலக மதுரம் மாநாட்டு மண்டபத்தில் மு.ப 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டுக் கூட்டமாக இக் கலந்துரையாடல் அமைந்தது.
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அபிவிருத்திகளில் பங்காற்றிக்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வு செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
கடந்த வருடம் மேற்குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகள் அதன் நிலமைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்படதுடன் இந்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் முக்கியமான கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் முதலானோர் கலந்துகொண்டனர்.
 
me1 me2
 
me3 me4
 
 
me5 me6