இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பூசை உபகரணங்களை ஆலய நிர்வாகத்தினரிடம் உத்தியோக கையளித்தார். இந்த நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் கீ.பீட் நிஜாகரன் . கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வவுனியா குருமன்காடு காளியம்மன் கோவில் மற்றும் வவுனியா கந்தசுவாமி ஆலயம் ஆகியன மேற்படி பூசை உபகரணங்களை அன்பளிப்பு செய்திருந்தன கலாசார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருந்தார்.







