மன்னார் மாவட்ட கல்விப் பேரவையின் முதற்கட்ட செயற்பாடாக பொருளாதார ரீதியில்
பின்தங்கிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவான பல்கலைக்கழக கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான மீளளிக்கக் கூடிய உதவிப் பணம் வழங்கல் நிகழ்வானது மாவட்ட செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இதில் உதவி மாவட்ட செயலாளர் கல்விப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் திட்டமிட்ட விவசாய அமைப்பின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அண்ணளவாக 150 மாணவர்கள் குறித்த உதவி திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்த போதிலும் முதல் கட்டமாக 45 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான முதலாவது மாதாந்த கொடுப்பனவு இன்று (17.06.2025) மாவட்ட செயலகத்தில் வழங்கி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 
01gh102
0304