மதிப்புக்குரிய மாவட்ட செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில், Child Fund நினறுவனத்தினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளர்களுக்கான மருத்துவ முகாமில் அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு, சமூக சேவைகள் திணைக்களத்தின் (மத்திய) உதவியுடன், மாவட்ட செயலாளர் ஊடாக தேவையான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளர்கள் அமைப்புகளுடன் மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் Child Fund திட்ட முன்மொழிவு, UK அமைப்பின் நிதி உதவித் தொகை, ESPD திட்டம் தொடர்பான விளக்க உரை மற்றும் வருடாந்த வேலைத்திட்டம் தொடர்பான விளக்கம் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது அமைப்புகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
01vl02
0304