வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகம் ஒழுங்கு செய்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டங்கள் 17.07.2025 அன்று வியாழக்கிழமை திருக்கேதீஸ்வரம் கெளரியம்பாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்புற நடைபெற்றன.
மன்னார் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் பு.டிலிசன் பயஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் கு.செல்வன் சிறப்பு விருந்தினராகவும் பாடசாலை அதிபர் த.கோகிலராஜா மற்றும் சிவனருள் இல்லப் பணிப்பாளர் செல்வரஞ்சன் ஆகியோர்கெளரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்
இந்த நிகழ்வில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் மன்னார் மாவட்ட அமைப்பாளர், பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் ,பெற்றோர் மன்னார் மாவட்ட செயலக அலுவலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்
ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் சமூகமயப்பட்ட நிகழ்வுகளாக நடாத்தப்பட வேண்டும் என்ற பண்பாட்டலுவல்கள் அலகின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த பாடசாலைச் சமூகத்துடன் இணைந்து இம்முறை ஆடிப்பிறப்பு விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததாக நிகழ்வின் பிரதம ஒழுங்கமைப்பாளரான மன்னார் மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் இநித்தியானந்தன் தெரிவித்தார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது அடுத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சோமசுந்தரப்புலவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர் அடுத்து பாடசாலை மாணவர்கள் வழங்கிய கலைநிகழ்வுகள் , ஆசிரியை க.கனகதுர்க்கா வழங்கிய சிறப்பு சொற்பொழிவு என்பன இடம்பெற்றன. இறுதியாக கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் ஆடிக்கூழ்,கொழுக்கட்டை என்பன வழங்கப்பட்டது.
 
Aadi1 Aadi2
 
Aadi3 Aadi4
Aadi5 Aadi6
 
Aadi7 Aadi8
 
Aadi9