மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப் பட்டுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை(24) காலை 9.30 மணியளவில் மாவட்டச் செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வருடா வருடம் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழமை.
இந்த நிலையில் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் குறித்து அழைக்கப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.
வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரம்,போக்குவரத்து,மருத்துவ வசதிகள் ,நீர் விநியோகம் ,உணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில் குரு முதல்வர் அருட்தந்தை ,மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை, காவல்துறையினர் ,கடற்படை அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.
 
madhu1 madhu2
 
madhu3 madhu4
 
madhu5