இலத்திரனியல் மக்கள்தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 29.07.2025 அன்று காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 5 பிரதேச செயலகத்திற்கு உட்பட்டவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மேலதிக பதிவாளர் நாயகம், பிரதி பதிவாளர் நாயகம், நானாட்டான் பிரதேச செயலாளர், மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதிச் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பதிவாளர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.