தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 2025/26 தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டிக்கான அளவுகோல்களை தெளிவுபடுத்துவதற்காக மன்னார் மாவட்டத்தை மையமாகக் கொண்ட மூன்று நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 06 ஆம் திகதி மன்னார் மாவட்ட மருதம் மாநாட்டு மண்டத்தில், மன்னார் மாவட்ட மேலதீக மாவட்ட செயலாளர் திரு.எம்.பிரதீப்(நிர்வாகம்), திரு.கே. நிஜஹரன்(காணி நிர்வாகம்) மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுகந்திகா கே. லியனகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களும், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள், மாவட்டத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த தொடர் நிகழ்ச்சிகளில், அரசபிரிவிற்கான அளவுகோல்களை உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஏ. டி. தஸ்னீம் அவர்களும், பாடசாலை பிரிவிற்கான அளவுகோல்களை உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.ஏ.அனுஷியா அவர்களும், அத்துடன் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. ஏ. நுஸ்ரி, அவர்கள் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைக்கான அளவுகோல்களை விளங்கப்படுத்தினார்கள். மன்னார் மாவட்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
pro1 pro2
 
pro3 pro4
 
pro5 pro6
 
pro7 pro8
 
pro9 pro10