நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினது தேசிய மொழிகள் பிரிவினால் ஒழுங்குபடுத்தப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மொழி திட்ட வசதியாக்கல் நிகழ்ச்சித் திட்டம் இன்று மாவட்ட செயலக முத்தரங்கம் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் திரு.ஹேமந்த புஷ்பகுமார அவர்களும் மொழிக்குழு வளவாளர்களாக திரு.உமா நாத், திரு.றஸ்மி, திருமதி.தாமரை மற்றும் திருமதி. சிந்துஜா அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். பங்கு பற்றுபவர்களாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வெவ்வேறு திணைக்கள அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். இச் செயலமர்வு தொடர்ந்து மூன்று நாட்கள் இடம் பெறும்.
இந்நிகழ்ச்சி தங்களது அலுவலகத்தை நாடி வரும் மக்களுக்கு அவர்களது மொழியில் சேவையை வழங்குவதற்கான சிறந்த சூழலை உருவாக்கி மொழி உரிமையை பாதுகாப்பதக்கான திட்டங்களை உருவாக்குவதற்கான பயிற்சியை வழங்கும் என நம்பப்படுகிறது.
 
lan1 lan2
 
lan3 lan4