மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் (இரண்டாம் காலாண்டு) மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் காணி மற்றும் நிர்வாகம், பிரதேச செயலாளர்கள், உதவி பணிப்பாளர் காணி பயன்பாட்டு திட்டமிடல், உள்ளூர் அதிகார சபை செயலாளர், மாவட்ட வன அலுவலர், விவசாய திணைக்கள அலுவலர்கள், வனவள ஜீவராசி அலுவலர்கள்,சுற்றுச் சூழல் பாதுகாப்பு அலுவலர்கள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் , கடற்தொழில் திணைக்கள அலுவலர்கள், பனை வள அதிகார சபை அலுவல்கள், மாவட்ட காணி அலுவலர்கள் மற்றும் ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் காணிக்கச்சேரி மற்றும் காணி கோரிக்கை தொடர்பான அனுமதிகளும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.





