இலங்கை தேசிய தின விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யும் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் 24.08.2025 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர், இந்து கலாசார பணிப்பாளர், பல்கலைகழக பேராசிரியர், விரிவுரையாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உறுப்பினர்கள், கலாசார மத்திய நிலைய அலுவலர்கள் இலங்கை திரைப்பட நடிகை என பலர் கலந்துகொண்டனர்.
மேலும் மன்னார் மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து மாவட்டத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், உணவு முறைகள் என மாவட்டத்தின் சிறப்பியல்புகள் தொடர்பாக கலந்து உரையாடினார்கள்.
 
NAT1 NAT2
 
NAT3 NAT4