மன்னார் மாவட்டத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் (26) செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்ட செயலாளருமான க.கனகேஸ்வரன் அவர்கள் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், திலகநாதன், ரவிகரன், பா.சத்தியலிங்கம், முத்து முஹமட் , அ. செல்வம் அடைக்கலநாதன்,
ரிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான், ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் கடற்படை, அதிகாரிகள் சிவில் சமூக அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாட பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.







