இன்று (23.09.2025) காலை 9.00 மணியளவில் மருதம் மாநாட்டு மண்டபத்தில், உள்ளூராட்சி மன்ற சபை அங்கத்தவர்களுக்காக அனர்த்த ஆபத்து குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த கருத்தமர்வு, மாவட்ட அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வின் முக்கிய நோக்கம், உள்ளூராட்சி நிர்வாகத்தினருக்குள் அனர்த்தங்களுக்கு முன்னேற்பாடு மற்றும் முறையான முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
குறித்த கருத்தமர்வில் அனர்த்த முகைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளருடன் உத்தியோகத்தர்களும் கலந்ந்து கொண்டனர்.
 
ag8 ag9
 
ag10 ag11
 
ag12