மன்னார் மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளான மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மற்றும் மன்னார் சித்திவிநாயகர் தேசிய பாடசாலை ஆகிய இரண்டு பாடசாலை அணிகளுக்கிடையிலான மன்னாரின் பெரும்போர் என வர்ணிக்கப்படுகின்ற கடின கிரிக்கெட் பந்து போட்டிக்கான ஆரம்ப நிகழ்வு 22.09.2025 அன்று நடைபெற்றது
மன்னார் மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டினை வளர்க்க வேண்டுமென்ற மாவட்ட செயலாளர் அவர்களுடைய விருப்பத்துக்கு அமைவாக "மன்னாரின் பெரும்போர் " என வர்ணிக்கப்படும் இந்த விளையாட்டு மன்னாரில் சானு பவுண்டேஷன் நிறுவனத்தின் முழுமையான நிதி பங்களிப்புடன் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .
எதிர்வரும் ஐப்பசி மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில், மன்னார் நகரின் தேசிய பாடசாலைகளான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் மன்/சித்தி விநாயகர் இந்து கல்லூரி அணிகளுக்கிடையேயான இளம் கிரிக்கெட் வீரர்களின் மோதல் மன்னார் மாவட்ட வரலாற்றில் முதல் முறையாக நடைபெறவுள்ளது.
இன்று நடைபெற்ற வெற்றி கிண்ண அறிமுக விழாவில், சிறப்பு அழைப்பின்பேரில் மன்னார் மாவட்டச் செயலாளர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டி ஏற்பாட்டின் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். மேலும், இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் இந்நிகழ்வு, மாவட்ட இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று அவர் கருத்துரைத்தார்.









