மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (02) வாணி விழா நிகழ்வு மாவட்ட செயலக தரைத்தளத்தில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது.பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்று விழாவை சிறப்பித்தன.குறித்த நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பல்வேறு பிரிவுகளின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு வாணி விழாவில் பங்கேற்றனர்.






