மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு தாவரமாக பரவியுள்ள கருவேல மரங்களை அகற்றுதல், அதற்குப் பதிலாக பொருத்தமான மாற்று தாவரங்களை பயிரிடுதல், மேலும் இச்செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாவட்டத்தின் உயர் உயிரியல் பல்வகைமையை பாதுகாக்குதல் உள்ளிட்ட விடயங்களை ஆராயும் ஆரம்ப கலந்துரையாடல் 03.10.2025 அன்று மாவட்ட செயலாளர் திரு. க. கணகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
 
ho7 ho8
 
ho9 ho10