மேற்படி 08.10.2025 அன்று மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வை மற்றும் சில புதிய வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு கருவிகளை உள்ளடக்கிய கிளைகளும் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், மன்னார் மாவட்ட செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார பணிப்பாளர், வடமாகாண கட்டடங்கள் பணிப்பாளர், மன்னார் மாவட்ட சுகாதார பணிப்பாளர், மன்னார் நகர பிரதேச செயலாளர், மன்னார் நகர சபை தவிசாளர், வைத்தியர்கள், அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் அபிவிருத்தி செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு பல தேவைகள் முன்மொழியப்பட்டன.





