மன்னார் மாவட்டத்தின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாபெரும் போர் என வர்ணிக்கப்பட்ட மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கும் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற கடின பந்து கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது
இரண்டு அணிகளும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்கள். இரண்டு தினங்களாக நடைபெற்ற இந்த போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்ததை சிறப்பம்சமாக காணப்பட்டது.
இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற ஒத்துழைத்த அனைவருக்கும் மாவட்ட செயலகம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. விசேடமாக இதற்கான முழு நிதி அனுசரணை வழங்கிய சானு பவுண்டேசன் நிறுவனத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக .
மாவட்ட செயலாளர்
மன்/புனித சவேரியார் தேசிய பாடசாலை அதிபர் அவர்களுடைய கருத்து.
நன்றி நவில்கிறோம்...
மன்னாரின் பெரும் சமர் எனும் கிரிக்கட் சுற்று போட்டியை ஆரம்பித்து வைப்பதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட அரச அதிபருக்கு எப்போதும் நன்றி கூறுகின்றொம்.
மற்றும் அனைத்து வித உதவிகளும் வழங்கி இவ்விளையாட்டை ஊக்குவித்த வலயக்கல்வி பணிப்பாளருக்கும், அவரது சார்பில் அனைத்து விடயங்களையும் முன்னெடுத்த Mr. Gnanaraj Sir இற்கு எமது நன்றிகள்.
இவ்விளையாட்டிற்கு நிதி அனுசரணை வழங்கி ஊக்குவித்த Shanu foundation Director இற்கு எமது நன்றிகள். விசேடமாக ஒவ்வொரு விடயங்களையும் நுணுக்கமாக பார்த்து, யாரும் குழம்பவிடாமல் கர்ச்சிதமாக திட்டமிட்டு, நெறிப்படுத்திய
Mr. Prince Sir இற்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக...
மன்னார் மாவட்ட எதிர்கால தலைமுறையை சிறந்தோராய் உருவாக்குவதற்கு மேற்கோண்ட, உங்கள் ஒவ்வொருவோரின் அர்பணிப்பணிப்பும் மிகவும் பெறுமதியானது. இவ்வாறு கூட்டாக சேர்ந்து மாவட்ட மாணவரின் ஒழுக்கம்/ கல்வி/ ஆன்மீகத்தினையும் கட்டி எழுப்புவோம்.
நன்றி
SXBC சார்பாக...
மன்/சித்திவிநாயகர் தேசிய பாடசாலை அதிபர் அவர்களுடைய கருத்து.

SHC சார்பாக...