2025 அக்டோபர் 09 ஆம் தேதி, மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் பிரதேச செயலகப்பிரிவுக்குரிய வடகிழக்கு மழைக்காலத்திற்கான தயார்படுத்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் மன்னார் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் திட்டமிடல் பிரதி பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, நகரசபை தவிசாளர், பிரதேச சபைச் தவிசாளர், இராணுவ அதிகாரிகள் Div.54&543, இலங்கை கடற்படையின் அதிகாரிகள், மன்னார் நகர பொலீஸ் அதிகாரி, கிராமநிலதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் வடகிழக்கு மழைக்கால செயல்பாடு மற்றும் பருவகாலத்தின் தாக்கம் குறித்து விளக்கமளித்தார். மேலும் மின்னல், பலத்த காற்று, திடீர் வெள்ளம், மற்றும் குளங்களின் கீழ்பகுதியில் ஏற்படும் வெள்ளம் போன்ற எதிர்பார்க்கப்படும் நிலைமைகள், மன்னார் நகரத்திற்கான புவிச்சரிதவியல் ஆய்வு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், புதிய திருத்தப்பட்ட அனர்த்த நிவாரணச் சுற்றறிக்கையின் விவரங்கள் குறித்தும் அதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் விளக்கமளித்தார்.






