இவ்வருடத்திற்கான இறுதி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 04.11.2025 அன்று காலை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, போக்குவரத்து, வீதி புனரமைப்பு, சுகாதாரம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

 

மேலும், மன்னார் மாவட்டத்தில் வன வள திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த திணைக்களத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், காதர் மஸ்தான், ஜெகதீஸ்வரன், துரைராஜா ரவிகரன், முத்து முகமது , ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அதோடு, வட மாகாண பிரதம செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள், திணைக்கள அதிகாரிகள், மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் சீராக முன்னெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டது.

Dcc251 Dcc252

Dcc253 Dcc254

Dcc255