மன்னார் மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண இறுதி நிகழ்வானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இறுதி நாள் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலர்கள், விளையாட்டு வீர வீராங்கனைகள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இருபதுக்கு அதிகமான திணைக்களங்கள் கலந்து சிறப்பித்தனர், இறுதியில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் வெற்றி பெற்றது, நானாட்டான் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தைப் பெற்று கொண்டது.













