மன்னார் மாவட்டத்தில் UNDP நிறுவன நிதி அனுசரணையுடன் OfERR Ceylon நிறுவனமூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற Public Engagement திட்ட செயற்பாட்டின் மீளாய்வு கலந்துரையாடலானது 18.11.2025 அன்று காலை 10:30 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் திரு.க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலகம் மன்னார் நகர பிரதேச செயலகம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம், மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், மீன்பிடி திணைக்களம், விவசாய திணைக்களங்களைச் சார்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் அத்தோடு UNDP திட்ட இணைப்பாளர் மற்றும் OfERR Ceylon நிறுவன உத்தியோகத்தர்களுடன் மாந்தை மேற்கு மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக பிரிவுகளில் இத்திட்ட மூடாக உருவாக்கப்பட்டுள்ள சமூகமட்ட அமைப்புகளின் ஒன்றியத்தின் நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர் மேற்படி நிகழ்வில் UNDP Public Engagement திட்டத்தின் திட்ட முன்னேற்றம், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் இனிவரும் காலங்களில் திட்டம் தொடர்பாக மேற்கொள்ள உள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் திட்டத்தின் பிரதேச மட்ட ஒன்றிய அளவிலான தேவை பகுப்பாய்வு தொடர்பாக பங்கு பெற்றிருந்த அரச திணைக்கள உத்தியோகத்தரின் கருத்துகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொள்ளப்பட்டது மேற்படி நிகழ்வில் சமூகமட்ட ஒன்றியத்தின் நிர்வாக அங்கத்தவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உட்பட 47 பேர் கலந்து கொண்டிருந்தனர்.








