இக்கலந்துரையாடலில், டிட்வா புயல் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த கீழ்காணும் வீதிகளுக்கு விசேட கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டிய திருத்தம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் விரிவாக ஆராயப்பட்டன:
குஞ்சுகுளம் வீதி
முள்ளிக்குளம் – பல்லமடு வீதி
பரப்புக்கடந்தன் வீதி
மேற்கண்ட வீதிகள் தொடர்பில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் (Road Development Department – RDD) கீழ் உள்ள வீதிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (Road Development Authority – RDA) பொறுப்பிலுள்ள வீதிகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் கீழ் பராமரிக்கப்படும் வீதிகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன்,
இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள், அடுத்த ஆண்டில் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட புதிய வீதி திட்டங்கள், அவற்றுக்கான தேவையான நிதி ஒதுக்கீடுகள், பணிகள் ஆரம்பிக்க வேண்டிய காலக்கெடுகள், மற்றும் செயல்படுத்தும் அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடலில் இடம்பெற்றன.
இவ்விசேட கலந்துரையாடலில்,
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ம. ஜெகதீஸ்வரன், மாவட்ட அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், மாகாண RDA பணிப்பாளர், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






