மன்னார் மாவட்ட செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!
மன்னார் மாவட்ட செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (2026.02.04) மாவட்ட செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் நாட்டின் சுதந்திரத்தின் பெறுமதி, ஒற்றுமை, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான பொறுப்புணர்வு குறித்து வலியுறுத்தினார்.
நிகழ்வின் இறுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரநடுகை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக ஏனைய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.






