மன்னாரில் இன்று சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது
மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (27) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மன்னார் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கு சட்டபூர்வமான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சட்டத்தரணிகள், அரச அலுவலகங்களின் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய துறையினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் விழிப்புணர்வு சேவைகளை வழங்கினர்.
காணி பிரச்சினைகள், குடும்பத் தகராறுகள், ஆவணச் சிக்கல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, நிர்வாக மற்றும் குடிமக்கள் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு சட்ட விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், தேவையான சட்ட உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வு நீதியமைச்சின் அனுசரணையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஆதரவுடன், UNICEF, UNDP, JURE திட்டம் மற்றும் சர்வோதயா அமைப்புகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
 
01bnm 02
 
03 04