சிப்பியாறு புனித அந்தோனியார் தேவாவாலய திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்.
எதிர்வரும் ஆனி மாதம் 2ஆம் திகதி (2026.06.02) இடம்பெறவுள்ள மன்னார் சிப்பியாறு புனித அந்தோனியார் தேவாவாலய திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடலானது மன்னார் ஆயரின் கோரிக்கைக்கமைவாக, மறைமாவட்ட குருமுதல்வர் வண.அருட்பணி P. கிறிஸ்துநேசரெட்னம் அவர்களது ஒழுங்கமைப்பில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க. கனகேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
குறித்த இக்கலந்துரையாடலில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் (பதில்) திரு கா.காந்தீபன், உதவி பிரதேச செயலாளர் திரு.ச.டிலக்சன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ.ஞா.பிறேம்குமார் , சிப்பியாறு புனித அந்தோனியார் தேவாவாலய பரிபாலகர் வண.அருட்பணி அருட்பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக, எதிர்வரும் ஆனி மாதம் 2ஆம் திகதி, காலை 6.00, 7.30, 10.30, மாலை 3.00 மணி என வெவ்வேறு நான்கு நேரங்களில் திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளது.
குறித்த நாளில் , பக்தர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், நீர் வசதிகள், மேலும் ஏனைய அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, குறித்த பகுதியில் மதுபானப்பாவனை மற்றும் விற்பனை விலைக்கட்டுப்பாடுகள் தொடர்பான இறுக்கமான தீர்மானங்களும் இக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டன.
 
01xdr 02
 
03 04